4. பகுத்தறிவே
மதியெனும்
புத்தியினை
மனிதர்களாய்
ஆய்ந்திடவும்
பிள்ளைகளைப்
பேணிடவும்
பெற்றவரைப்
போற்றிடவும்
கற்றவித்தை
விதைத்திடவும்
காண்பவற்றை
விளைத்திடவும்
காதலென்னும்
உறவுதனில்
காலமெல்லாம்
உயிர்பெறவும்
பிறர்நலத்தில்
தன்னலத்தை
வையகத்தில்
நிலைத்திடவும்
இறையிணைந்த
இயற்கையோடு
இயங்குகின்ற
பகுத்தறிவே
உனைப்பெற்ற
உயர்பிறவி
உயரண்டத்தில்
நாங்கள்தானோ?!……
***
5. வாழ்வின் எல்லை
அளவற்ற பரப்பினில் வாயுக்கள்
ஆங்காங்கு எரிந்திடும் சூரியன்கள்
சூரியனின் சிதறல்கள் கோளங்கள்
கோளத்தில் அமைந்ததே நமதில்லம்
வாழிடத்து வசதிகள் பூமிதனில்
வளங்களும் நலங்களும் இணைந்திடவே
காலங்கள் மாற்றிடும் சுழற்சியிலே
கவலைகள் இணைந்திடும் நிகழ்ச்சியிலே
அறிவினம் என்றால் ஆய்ந்திடணும்
அறிவீனம் சேர்ந்தால் மாய்த்திடணும்
தன்னினம் வாழ்ந்திட உழைத்திடணும்
தன்னலம் வளர்ந்திட உயர்ந்திடணும்
சாதியும் மதங்களும் சாவதில்லை
சார்ந்தவர் பண்பாய் நிலைப்பதில்லை
வெறியினால் அலைவதில் அமைதியில்லை
வெறுமையாய் மடிவதில் மதியுமில்லை
இரவும் பகலும் ஒரேநாளே
இன்பமும் இன்னலும் மறுவாழ்வே
இவைகள் மாய்ந்திடும் காலத்தினால்
இகமும் அழிந்திடும் இயற்கையினால்
வேகத்தை வளர்க்கின்ற அறிவியல்கள்
விவேகத்தை மறக்கின்ற செயல்களினால்
பாவங்கள் சேர்க்கின்ற பண்பழிவால்
பரன்களைப் படைக்கின்ற இழிச்செயல்கள்
தேவைகள் எவரையும் நிறைந்ததில்லை
திருப்தியும் நிறைவும் எவர்க்குமில்லை
அமைதிகள் கெடுப்பதே அறிவின்எல்லை
அனைவரும் பிரிவதே வாழ்வின்எல்லை…….
***
குழந்தைக் கவிதைகள்
– தொடரும்
மின்னூலாகப் படிக்க
Leave a Reply