62. என்றுமே திருடாதீர்
திருடும் மனிதரே
திருடாதீர்
திருந்தாக் குணத்திலே
தொடராதீர்
பிழைப்பூட்டும்
தொழிலொன்றைச்
செய்யாமல்
பிறர்நோகப்
பிழைகளையே
செய்வதென்ன?
அறிவுடனே
ஆற்றலும்தான்
உமக்கிருக்க
அடுத்தவரை
அண்டியுண்ணும்
அவலமென்ன?
சோம்பலுடன்
செயலிழந்து
அலைவதனால்
சொரணையற்ற
மானிடனாய்
வாழ்வதென்ன?
உழைக்கின்ற
உடல்நிலை
உமக்கிருக்க
மதியிழந்து
என்றுமே
திருடாதீர்…..
63. டாஸ்மார்க் பாஸ்மார்க்கல்ல
டாஸ்மார்க்! டாஸ்மார்க்!! மதுபானங்கள்!
டாக்டர்களும் அருந்திடும் மருந்துமாச்சி
பாஸ்மார்க் எடுக்காத மாணவர்களும்
ஜூஸ்போல குடிக்கின்ற நிலையுமாச்சி
தமிழ்நாடு அரசின் வருவாய்க்கும்
தகுதிக்கும் மேலாகவே வளர்கின்றது
ஏழைகள் எளியோர்கள் வரவையுண்டு
இரப்பாராய் தொடர்ந்திட வைக்கின்றது
குடும்பத்துத் தலைவர்கள் குடித்தழித்தந்தால்
குழந்தைகள் தாய்மார்கள் என்னசெய்வார்கள்?
இலவசங்கள் இரப்பாலே பிழைப்பமைந்தால்
இனியார்தான் உழைத்திட முனைந்திடுவார்?
குடியர்கள் யாவரும் ஓரினமாய்
குடித்தே கும்மாளம் போடுவதால்
படிப்பையே தொடர்ந்திட பிள்ளைகளும்
குடித்தே புலம்புவார் வாழ்விழப்பால்
இலவசங்கள் அளிப்பதை நிறுத்திவிடுங்கள்
டாஸ்மார்க் கடைகளையும் அடைத்திடுங்கள்
தொலைக்காட்சி விளம்பரப் பெட்டிகளை
தொடரால் இயக்குவதை தடுத்திடுங்கள்
காலத்தை கொல்லுகின்ற செயல்தவிர்த்து
கருமமாய் செயல்பட வழிசெய்யுங்கள்
வருவாய்கள் உயர்த்திடும் தொழில்களினால்
வருமானம் பெருக்கிடும் உழைப்போதுங்கள்
மின்னணு யுகத்தினில் வளர்ந்திடவும்
மின்சாரக் சுவிட்சாய் இயக்கிடவும்
வாலிபர் நிர்வாகமே பொறுப்பேற்கவும்
வாழ்கின்ற சீர்கேட்டை துடைத்தாகணும்……
64. செய்யாதே!
பாம்புக்கு பால்வார்க்காதே
குடிக்காது
பாலையில் நீர்பாய்ச்சாதே
தேங்காது
பாதையில் முள்வைக்காதே
நிலைக்காது
பாவத்தில் பணம்சேர்க்காதே
உதவாது
பாராமல் பழிதூற்றாதே
பொருந்தாது
பாசாங்காய் நடிக்காதே
மெய்க்காது
65. தற்கொலைக்கா?
நாக்காலே
உணவுதேடும்
நாலுகால்
தவளையே!
தண்ணீரிலும்
தரையினிலும்
தத்தித்தாவும்
குள்ளையே!
ஊரறியக்
குரலெழுப்பி
உன்னுயிரை
மாய்ப்பதேன்?
தற்கொலைக்கா?!…..
– தொடரும்
மின்னூலாகப் படிக்க
Leave a Reply